ஆப்நகரம்

கர்நாடக மாநிலத்தில் 3 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு!

கர்நாடக மாநிலத்தில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Jul 2019, 11:07 pm
கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில், மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார்.
Samayam Tamil an


கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து முதல்வர் குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன், கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. தொடர்ந்து கடந்த 23-ம் தேதி குமாரசாமி தலைமையிலான அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து, ஆட்சி கவிழ்ந்தது.

மிரட்டும் என்.ஐ ஏ., சட்டம்... சந்தேகம் வந்தாலே அதிரடிதான்...!!

இந்நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் 15 பேரில் மூன்று பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜர்க்கிஹோலி, மகேஷ் கும்தஹள்ளி மற்றும் சுயட்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோர் அவர்களின் பதவிக்காலம் முடியும் வரை தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இந்த 3 எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவும் அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் எடுக்கப்பட்டதல்ல என தெரிய வந்தது. இதற்காக ஆதாரங்கள் இருப்பது உறுதியானதால் , கட்சித் தாவல் தடைச் சட்டப்படி அவர்களை தகுதி நீக்கம் செய்யப்படுகின்றனர். இவர்கள் நடப்பு பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் பாஜகவுக்கு குழல் ஊதும் ஓபிஎஸ் மகன்

தற்போது மூன்று எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதால், கர்நாடக சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 224ல் இருந்து 221 ஆக குறைந்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 12 பேரின் நிலை குறித்து சபாநாயகர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதனிடையே, 105 உறுப்பினர்களை கொண்ட பா.ஜ.க அறுதி பெரும்பான்மைக்கு இன்னமும் 6 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதால் ஆட்சி அமைப்பதில் தயக்கம் காட்டி வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

அடுத்த செய்தி