ஆப்நகரம்

எல்லையில் பதற்றம்: 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வருகை!

இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், 3 ரஃபேல் போர் விமானங்கள் நாளை இந்தியா வரவுள்ளது

Samayam Tamil 3 Nov 2020, 10:45 pm
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் விமானங்கள் வாங்க மத்திய அரசு மேற்கொண்ட ஒப்பந்தந்தின்படி, விமானங்கள் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல் தொகுப்பாக 5 ரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன். ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படைத்தளத்தில் கடந்த ஜூலை 29ஆம் தேதி அவை தரையிறங்கின.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட்டன. இந்த விழாவானது ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப் படைத்தளத்தில் நடைபெற்றது. இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், இந்த விமானங்கள் லடாக் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் பிரான்சில் இருந்து நாளை இந்தியா வரவுள்ளது. இவையும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டால் மொத்தம் 8 ரஃபேல் போர் விமானங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா வளர்ப்பை கையும் களவுமாக கண்டுபிடிக்கும் சேட்டிலைட்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலத்தில் ரஃபேல் போர் விமானங்கள் வாங்க கையெழுத்தான ஒப்பந்தம் காலாவதியானதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி அரசு புதிய ஒப்பந்தத்தை உருவாக்கியது. இந்த ஒப்பந்தத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனாலும், இந்த விமானங்கள் ஒப்பந்தந்தின்படி இந்தியா வந்தடைந்து வருகிறது.

அடுத்த செய்தி