ஆப்நகரம்

மூன்று வங்கிகள் சேர்ந்து மற்றொரு வங்கியில் கொள்ளை!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்ததாக கூறப்படும் ரூ.11000 கோடிக்கு மோசடியில் மேலும் 3 வங்கிகளுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Feb 2018, 2:17 pm
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்ததாக கூறப்படும் ரூ.11000 கோடிக்கு மோசடியில் மேலும் 3 வங்கிகளுக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil three other banks linked in pnbs banking fraud
மூன்று வங்கிகள் சேர்ந்து மற்றொரு வங்கியில் கொள்ளை!


பஞ்சாப் நேஷனல் வங்கி இந்தியாவின் 2வது பெரிய அரசு வங்கி ஆகும். இவ்வங்கி பங்குச்சந்தைக்கு (பிஎஸ்இ) அனுப்பியுள்ள அறிக்கையில் ரூ.11000 கோடி முறைகேடு நடந்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் பிரபல நகைக்கடை அதிபர் நிரவ் மோடி மீது புகார் கூறப்படுகிறது. இந்த முறைகேடு கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

இதில் மேலும் இரு பொதுத்துறை வங்கிகள் (இந்தியன் யூனியன் வங்கி, அலகாபாத் வங்கி) மற்றும் ஒரு தனியார் வங்கி (ஆக்ஸிஸ் வங்கி) ஆகியவற்றுக்கும் தொடர்பிருக்கலாம் என்று தெரிகிறது. இந்த வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கியால் வழங்கப்படும் கடன் சார்ந்த ஆவணங்களை பெறுகின்றன.

இது தொடர்பாக, கடந்த ஜனவரி 16ஆம் தேதி பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி