ஆப்நகரம்

ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி... துணை முதல்வராகிறார் துஷ்யந்த்

ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Samayam Tamil 25 Oct 2019, 10:15 pm
ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஹரியானா மாநிலத்தின் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.
Samayam Tamil thushyanth may become deputy cm of haryana
ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சி... துணை முதல்வராகிறார் துஷ்யந்த்


பாஜக தலைமையிலான ஆட்சி ஹரியானாவில் அமைய உள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுமார் 10 தொகுதிகளை வென்றார்.

பாரதீய ஜனதா கட்சிக்கு இணையான போட்டியாக ஜனநாயக ஜனதா கட்சி வரலாம் என்று அரசியல் சூழலில் பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவரும் இந்திய நாட்டின் உள்துறை அமைச்சரும் ஆன அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார்.

இரு கட்சிகளின் உறவு குறித்து பேசியதாகவும் ஒப்பந்தம் குறித்து பேசியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சௌதாலா..


அதாவது, பாஜக தலைமை வகிக்கும் இந்த ஆட்சியில் முதல்வராக மனோகர் லால் கட்டார் மற்றும் துணை முதல்வராக ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சௌதாலா ஆகிய இருவரும் செயல்படும் வகையில் ஆட்சி தொடரும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவையான நிலையில் பாஜக 40 இடங்களை மட்டுமே வென்றிருந்தது. பெரும்பான்மைக்கு 6 இடங்கள் தேவையான நிலையில் 10 இடங்களை வென்ற ஜனநாயக ஜனதா கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்கப்பட்டு உள்ளது.

துணை முதல்வராக சௌதாலா பதவி வகிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன..

அடுத்த செய்தி