ஆப்நகரம்

டிக்டாக்கில் 11 லட்சம் ஃபாலோவர்ஸ்..! 16 வயது சிறுமி தற்கொலை..!

டெல்லியில் வசித்து வந்த மைனர் பெண் தனது வீட்டில் கடந்த புதன்கிழமை அன்று தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 30 Jun 2020, 6:01 pm
டெல்லி : தற்கொலை செய்துகொண்ட சிறுமிக்கு டிக்டாக்கில் ஒரு மில்லியன் பேரும், இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர். அவர் இறப்பதற்கு முன்னதாக ஒரு பஞ்சாபி பாடலுக்கு நடனமாடி அதனை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil siya kakkar


டெல்லி மாநிலம் ஷாஹ்தாராவில் தந்து பெற்றோருடன் வசித்து வந்தவர் சியா கக்கார் (16). டிக்டாக்கில் இவரை 11 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். தினமும் ஆடி, பாடி வீடியோ வெளியிட்டு வந்த இவர் திடீரென கடந்த புதன்கிழமை அன்று 9 மணி அளவில் தனது அறையில் தற்கொலை செய்துகொண்டதாக, அவரது தந்தை ஷாஹ்தாரா காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதையடுத்து சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிறுமியின் இறப்பு குறித்து சந்தேகிக்கும் காவல் துறையினர்,
சியா தற்கொலை செய்துகொண்டதாக எந்த அறிகுறியும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.


சியாவின் இறப்பு செய்தி வெளியான பின்னர், அவரது வீடியோக்கள் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும், சிறுமி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் புதன்கிழமை அன்றுகூட, ஒரு பஞ்சாபி வீடியோவுக்கு சிரித்தபடி நடனமாடியுள்ளார். அந்த வீடியோவும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

கொரோனாவுக்கு மருந்து: பதஞ்சலி நிறுவனம் அந்தர் பல்டி!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு நேற்று (திங்கட்கிழமை) தடை விதித்திருந்தது. ஆனால்,சிறுமியின் மரணம் அதற்கு முன்னதாகவே நிகழ்ந்திருப்பதால், இதை தற்கொலை என்று உறுதியாக சொல்ல முடியாது என போலீசார் தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி