ஆப்நகரம்

‘போதை’ விமானிகளுக்கு 1 ஆண்டு சிறை; ரூ.5 லட்சம் அபராதம்

விமானிகள் மற்றும் ஊழியர்கள் குடிபோதையில் இருந்தால், 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.

TNN 13 Aug 2016, 6:06 pm
விமானிகள் மற்றும் ஊழியர்கள் குடிபோதையில் இருந்தால், 1 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tipsy pilots crew to be jailed now civil aviation ministry announces
‘போதை’ விமானிகளுக்கு 1 ஆண்டு சிறை; ரூ.5 லட்சம் அபராதம்


இந்திய விமானச் சேவை விதிமுறைகளின்படி, பணியில் இருக்கும் விமானிகள் விமானத்தை இயக்குவதற்கு 12 மணி நேரம் முன்பாக, மது அருந்தி இருக்கக் கூடாது. இதற்காக பிரத்யேக பரிசோதனையும் நடத்தப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக, இந்த சோதனையில் ஏர் இந்தியா, ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனங்களில் பணிபுரியும் விமானிகள் மற்றும் விமான ஊழியர்கள் பலரும் பிடிபடுவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக, பணி நேரத்திலேயே ஏராளமான விமானிகளும், ஊழியர்களும் குடித்துவிட்டு வருகின்றனர். இவ்வாறு பிடிபடும் நபர்களுக்கு, தற்போது 3 மாத சஸ்பெண்ட் உத்தரவு, 5 ஆண்டுகளுக்கு விமானங்களை ஓட்ட உரிமம் ரத்து மற்றும் சம்பளம் மற்றும் இதர படிகள் நிறுத்தம் போன்ற தண்டனைகள் அளிக்கப்படுகிறது.

எனினும், குடித்துவிட்டு வரும் விமான ஊழியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து, போதையில் இருக்கும் விமானிகள், விமான ஊழியர்களுக்கு கடும் தண்டனை விதிக்க மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இதன்படி, விமானிகள், விமான ஊழியர்கள் குடிபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து இயக்குனர் அதிகாரப் பூர்வமாகக் கூறியுள்ளார். இதன் மூலம் விமானிகள் மீதான குற்றங்கள் முதல் முறையாக போலீஸ் விசாரணைக்கு உட்படுத்த வகை செய்யப்படுகிறது.

இதன்மீது, ஏர் இந்தியா மற்றும் ஜெட்ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்கள் விமானிகள் மீதான புகார்கள் அனைத்தையும் அடுத்த 2 வாரத்திற்குள் சமர்ப்பிக்கும்படி விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.

அடுத்த செய்தி