ஆப்நகரம்

திருப்பதி மலையில் ஏற முடியாது; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 30 Nov 2020, 10:24 am
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஏழுமலையான் கோயில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் அமைந்துள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவர். ஏழுமலையானை தரிசித்த பிறகு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் தனித்துவமான சுவைக்காகவே பலரும் திருமலைக்கு சாமி தரிசனத்திற்கு வருவர்.
Samayam Tamil tirupati to tirumala srivari mettu footpath closed due to landslide
திருப்பதி மலையில் ஏற முடியாது; பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!


திருப்பதியில் கொரோனா

உலகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் திருப்பதியையும் விட்டு வைக்கவில்லை. பக்தர்கள் நலன் கருதி சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. முதலில் கட்டண தரிசனமாகவும், படிப்படியாக இலவச தரிசனமும் அனுமதிக்கப்பட்டது. பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டு தரிசன டிக்கெட்கள், இலவச டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

நிவர் புயலால் கன மழை

இந்த சூழலில் வங்கக் கடலில் சமீபத்தில் உருவான நிவர் புயல் காரணமாக திருப்பதி மற்றும் திருமலையில் கன மழை வெளுத்து வாங்கியது. கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் திருமலையில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் திருமலையில் இருக்கும் ஐந்து அணைகளும் அதிகப்படியான நீர்வரத்தால் நிரம்பின.

திடீர் நிலச்சரிவு

இதையொட்டி பாதுகாப்பாக நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் திருமலைக்கு வரும் சாலைகளில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஹைதராபாத் நகரில் இருந்து திருமலைக்கு வந்த பக்தர்களின் கார் மீது கற்கள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர்.


திருப்பதி மலையில் அதிர்ச்சி; பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்ட பக்தர்கள்!

பக்தர்களுக்கு எச்சரிக்கை

இதுபற்றி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்து கற்களை அப்புறப்படுத்தி பக்தர்களை மீட்டு திருமலைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல் மேலும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிகிறது. எனவே பக்தர்கள் மிகவும் எச்சரிக்கையாக பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. திருப்பதியில் இருந்து திருமலைக்கு ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடைபயணமாக சென்று வந்தனர்.

மலைப் பாதை மூடல்

இதில் குறைந்த அளவிலான படிக்கட்டுகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த சூழலில் தொடர் மழை காரணமாக ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகேவுள்ள மலைப் பாதையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தப் பாதை தற்காலிகமாக மூடப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தப் பாதை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி