ஆப்நகரம்

டெல்லியில் கொட்டும் மழையில் போராடும் தமிழக விவசாயிகள்

விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் இரண்டாவது நாளாக கொட்டும் மழையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

TNN 17 Jul 2017, 6:36 pm
விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் இரண்டாவது நாளாக கொட்டும் மழையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil tn farmers protest in delhi rain
டெல்லியில் கொட்டும் மழையில் போராடும் தமிழக விவசாயிகள்


விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிாி மேலாண்மை வாாியம் அமைக்க வேண்டும், விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை நிா்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜீலை மாதத்தில் டெல்லியில் தொடா் போராட்டம் நடத்தப்படும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் அய்யா கண்ணு தெரிவித்திருந்தாா்.

இந்தநிலையில் நேற்று தமிழக விவசாயிகள் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவா் அய்யா கண்ணு தலைமையில் விவசாயிகள் பிரதமரின் இல்லத்தை முன்பாக போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் டெல்லி போலீசார் அதற்கு அனுமதியளிக்கவில்லை.

இதனைதொடர்ந்து டெல்லி ஜந்தர் மந்தர் சென்ற தமிழக விவசாயிகள் அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு டெல்லி போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

இதனையடுத்து இரண்டாவது நாளாக டெல்லி ஜந்தர் மந்தர் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் இன்று பலத்த மழை பெய்த போதிலும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள தமிழக விவசாயிகள் கொட்டும் மழையில் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அடுத்த செய்தி