ஆப்நகரம்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு; திருப்பதியில் இன்றே கடைசி!

வருடாந்திர பவித்ர உற்சவம் இன்றுடன் நிறைவு பெறவுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 20 Aug 2021, 9:37 am

ஹைலைட்ஸ்:

  • திருமலையில் வருடாந்திர பவித்ர உற்சவம் இன்றுடன் நிறைவு பெறுகிறது
  • சுப்பா ரெட்டி உள்ளிட்ட திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்
  • வரும் அக்டோபர் மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட் திடீரென நிறுத்தி வைப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Tirupati Temple
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் கொரோனாவிற்கு பிறகான தரிசனத்தில் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் ஏழுமலையான் பக்தர்கள் வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். தினசரி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணிக்கை வசூலாகி வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருமலையில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மட்டும் விற்கப்பட்டு வருகிறது.
பவித்ர உற்சவ விழா

வரும் அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் டிக்கெட்கள் இன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் பவித்ர உற்சவம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் தினந்தோறும் நடைபெறும் பூஜைகளில் அர்ச்சகர்கள், பக்தர்கள், ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் செய்யப்படும்.

திருப்பதியில் இவர்களுக்கு சிக்கல்; ரூட்டை மாத்தும் ஆந்திர மாநில அரசு!

பாரம்பரிய நிகழ்வு

கடந்த 15ஆம் நூற்றாண்டு வரை ஏழுமலையான் கோயிலில் பவித்ர உற்சவம் நடைபெற்றதாக கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு நிறுத்தப்பட்ட உற்சவத்தை, மீண்டும் 1962ஆம் ஆண்டு முதல் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டிற்கான பவித்ர உற்சவம் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது.

இன்றுடன் நிறைவு

அன்றைய தினம் பவித்ர மாலைகள் பிரதிஷ்டை உடன் பவித்ர உற்சவம் தொடங்கியது. இரண்டாவது நாளான நேற்று யாகசாலையில் வேதமந்திரங்கள் முழங்கப்பட்டன. அப்போது சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதையடுத்து மூலவர், உற்சவர்கள், யோகநரசிம்மர், வகுலமாதா தாயார், பேடி ஆஞ்சநேயர், வராக சுவாமி, ஆனத நிலையம், கொடி மரம்,

புதிய சர்ச்சையில் பிரசாந்த் கிஷோர்; மேலும் சறுக்குகிறதா காங்கிரஸ்?

பலி பீடம் உள்ளிட்ட பல்வேறு இதர சன்னதியில் யாகசாலையில் வைக்கப்பட்ட பவித்ர மாலைகள் சமர்பிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, செயல் அலுவலர் ஜவகர், கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கடைசி நாளான இன்று (ஆகஸ்ட் 20) யாக பூர்ணாஹூதியுடன் பவித்ர உற்சவம் நிறைவடைகிறது.

அடுத்த செய்தி