ஆப்நகரம்

சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: வரும் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு

சுங்கச்சாவடி கட்டணம் ரத்து, வரும் 14ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

TNN 11 Nov 2016, 6:55 pm
டெல்லி: சுங்கச்சாவடி கட்டணம் ரத்து, வரும் 14ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil toll suspension has been extended till 14th november midnight
சுங்கச்சாவடி கட்டணம் ரத்து: வரும் 14ஆம் தேதி வரை நீட்டிப்பு


நாடு முழுவதும் கடந்த 8ஆம் தேதி முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வாங்க மறுத்துவிட்டனர். சில இடங்களில் உரிய சில்லறை வழங்கப்படாததால், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் நின்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் இன்று நள்ளிரவு வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் சுங்கக்கட்டணம் ரத்து, வரும் 14ஆம் தேதி நள்ளிரவு வரை தொடரும் என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

The toll suspension has been extended till 14th November midnight for all National Highways.

அடுத்த செய்தி