ஆப்நகரம்

10, 12வது வகுப்பில் முதலிடம் பிடித்தவர்களுக்கு கார் பரிசு; ஆச்சரியப்படுத்திய கல்வி அமைச்சர்!

பள்ளிக் கல்வியில் சிறந்த விளங்குவதை ஊக்குவிக்கும் வகையில் டாப் மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Sep 2020, 10:57 am
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 18ஆம் தேதி மெட்ரிகுலேசன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2,31,300 மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 1,71,647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல் 3,85,144 மாணவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 2,88,928 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் டாப்பர்கள் யார், யார் என்ற தகவலை மாநில அகாடமிக் கவுன்சில் வெளியிடாமல் இருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களை அழைத்து பரிசாக கார்களை வழங்கி மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ ஆச்சரியப்படுத்தி உள்ளார்.
Samayam Tamil School Toppers


இதுதொடர்பான நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள மாநில சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. 12ஆம் வகுப்பில் அறிவியல் பிரிவில் அமித் குமார் என்ற மாணவர் முதலிடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவர் மொத்தமுள்ள 500 மதிப்பெண்களுக்கு 457 மதிப்பெண்கள் (91.4%) பெற்றுள்ளார்.

இவரே மூன்றுவிதமான பிரிவிலும் முதலிடம் பிடித்தவர் ஆவார். இதேபோல் மணிஷ் குமார் என்ற மாணவர் 10ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500க்கு 490 மதிப்பெண்கள்(98%) பெற்றுள்ளார்.

பள்ளிகள் திறப்பு, மாணவர்களின் கல்வி: ஆட்டம் காட்டும் மத்திய, மாநில அரசுகள்!

பள்ளி படிப்பில் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற பரிசுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கல்வித்துறை அமைச்சர் மகதோ, என்னுடைய வாக்குறுதிகளை நான் நிறைவேற்றியுள்ளேன்.

கல்வியில் மேலும் சிறந்த விளங்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே இத்தகைய பரிசு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 10, 12வது வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் உயர்கல்விக்கான செலவை ஏற்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமீபத்தில் 11ஆம் வகுப்பில் சேர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு தனது பள்ளிக் கல்வியை அமைச்சர் மகதோ மீண்டும் தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி