ஆப்நகரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1000த்தை தாண்டியது!

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 29 Mar 2020, 9:04 pm
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய் கொத்துக்கொத்தாக உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த நோயை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், தங்களது நாட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் உலக நாடுகளே விழி பிதுங்கியுள்ளது. இதற்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் உலக அளவில் மருத்துவ வல்லுனர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சீனாவின் மையப்புள்ளியாக இருந்த கொரோனா தற்போது இத்தாலியை மையமாக கொண்டு ஆட்டி வருகிறது. இத்தாலியில் கொத்துக்காக மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இத்தாலியில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,000த்தை தாண்டியுள்ளது.

குறையும் கொரோனா நோய்த்தொற்று பரவல்: ஈ, கொசுக்கள் மூலம் பரவுமா?

சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு மாதமாக ருத்ரதாண்டவம் ஆடிவந்த கொரோனா வைரஸ், இந்தியாவில் தற்போது தலைத்தூக்க தொடங்கியுள்ளது. கொரோனா சமூக பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய அங்கமாக வருகிற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.


இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 95 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி