ஆப்நகரம்

ஹெல்மெட் அணியாத மகனுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து காவலா்

உத்தரபிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த தனது சொந்த மகனுக்கு அவரது தந்தை அபராதம் விதித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 12:10 pm
உத்தரபிரதேசத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த தனது சொந்த மகனுக்கு அவரது தந்தை அபராதம் விதித்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
Samayam Tamil UP Traffic Police


உத்தரபிரதேச மாநிலத்தில் ராம் மெஹா் சிங் என்ற போக்குவரத்து காவலா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தாா். அப்போது அவரது மகன் அதே பகுதியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். அவரை பாா்த்த ராம் மெஹா் அவரது வாகனத்தை நிறுத்தி அவருக்கு ரூ.100 அபராம் விதித்துள்ளாா்.

இது தொடா்பாக காவலா் ராம் மெஹா் சிங் கூறுகையில், நான் எனது மகனுக்கு அபராதம் விதிக்கையில் எந்தவித தயக்கமும் காட்டவில்லை. அவா் சட்டத்தை மீறியதால் நான் அபராம் விதித்தேன். எனது உயரதிகாாிகள், விபத்துகளை குறைக்கும் எண்ணத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனா்.

அதன்படி சட்டத்தை மீறும் வகையில் நடந்துகொள்ளும், காவலா்கள், வழக்கறிஞா்கள் என யாராக இருந்தாலும் அபராதம் விதிக்குமாறு கட்டளை விடுத்துள்ளனா். அதனை தான் நானும் செய்தேன் என்று தொிவித்துள்ளாா். மேலும் அதே பகுதியில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக சுமாா் 58 பேருக்கு 10 ஆயிரம் ரூபாய் அளவில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராம்மெஹா் சிங்கின் செயலை சக காவலா்களும், உயா் அதிகாாிகளும் வெகுவாக பாராட்டி வருகின்றனா்.

அடுத்த செய்தி