ஆப்நகரம்

கடத்தப்பட்ட குழந்தை; நிற்காமல் ஓடிய எக்ஸ்பிரஸ் ரயில் - கடைசியில் இப்படி!

முதல்முறை திருடனைப் பிடிப்பதற்காக எக்ஸ்பிரஸ் ரயில் எங்கேயும் நிற்காமல் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 26 Oct 2020, 3:57 pm
உத்தரப் பிரதேச மாநில லலித்பூர் ரயில் நிலையத்தில் ராப்திசாகர் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தது. இந்த சூழலில் ரயில் நிலையத்தில் பெற்றோருடன் நின்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். உடனே அவர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ராப்திசாகர் எக்ஸ்பிரஸில் ஏறியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனே ரயில்வே போலீசாரைத் தொடர்பு கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில் நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் குழந்தையுடன் ரயிலில் ஏறியது தெரியவந்தது.
Samayam Tamil Train Kidnap


உடனே மற்ற ரயில் நிலையங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இந்த சூழலில் ரயில்வே போலீசார் அதிரடியான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதாவது லலித்பூர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட ரயில் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து இயக்குமாறு ரயில் ஓட்டுநருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். எனவே லலித்பூரில் இருந்து போபால் வரை ரயில் எங்கேயும் நிற்காமல் இயங்க அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ரயில் தொடர்ந்து பயணித்து போபால் ரயில் நிலையத்தை வந்தடைந்தது.

பள்ளிகள் மீண்டும் மூடல்; அடுத்த ஷாக் ஆரம்பம் - மாணவர்களுக்கு எச்சரிக்கை!

அங்கு ரயிலில் இருந்து வேகமாக இறங்கி தப்பியோடிய மர்ம நபரை போலீசார் வளைத்துப் பிடித்தனர். உடனே அவரிடம் இருந்து குழந்தையை மீட்டனர். இதையடுத்து பெற்றோரை வரவழைத்து அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ரயில் பயணிகள் அனைவரும் குழம்பிவிட்டனர்.

போபால் ரயில் நிலையம் வந்ததும் நடந்த சம்பவங்களைப் பார்த்த பிறகு தான் நடந்ததை உணர்ந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது. திருடனைப் பிடிக்க ரயிலை நிற்காமல் இயக்கியது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி