ஆப்நகரம்

முன்பதிவுகள் ரத்து; கட்டணங்களை திரும்பக் கொடுக்கப் பரிசீலனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்பதிவு செய்த பயணங்களையும் ரத்து செய்யப்போகிறது அரசு.

Samayam Tamil 18 Mar 2020, 9:49 pm
நாடு முழுக்க கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலை அனைத்துக் குடிநபர்களுக்கும் சவாலான சூழலை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்களுக்கு பணிச்சூழல் வீடுகளுக்கு மாறியுள்ளது. பலருக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil அரசு வெளியீடு


நாட்டின் அடிப்படைப் பொருளாதாரம் மட்டுமன்றி உலகம் முழுக்க பொருளாதாரப் பின்னடைவைக் கொரோனா ஏற்படுத்தியுள்ளது.

பயணச்சேவைகள் பெருமளவு முடங்கிப்போயிருக்கும் நிலையில் சரக்குப் போக்குவரத்தும் முடங்கியதால் நாடே ஸ்தம்பித்துள்ள நிலையில், தனிநபர் போக்குவரத்தையும் குறைத்துக்கொள்ள அறிவுறுத்தல்கள் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டு வந்தன.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 151 ஆக உயர்வு

இந்நிலையில், பயனங்களைத் தடுக்கும் பொருட்டு அடுத்தகட்ட நடவடிக்கையாக ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணங்களை ரத்து செய்யவும் சாலைப் போக்குவரத்துத்துறை பரிசீலனை செய்து வருகிறது.


மேலும், அதற்கான கட்டணங்களையும் திரும்ப அளிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்லன. மக்கள் பயணிப்பதைத் தடுக்கும் முயற்சிகளில் ஒன்றாக இதனை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி