ஆப்நகரம்

பிளாஸ்டிக் விழிப்புணர்வை இப்படியும் ஏற்படுத்தலாம்; அசத்திய தமிழக பெண் ஐ.ஏ.எஸ்!

திருவனந்தபுரம்: வித்தியாசமான முறையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வை ஏற்படுத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 5 Jan 2019, 10:31 am
தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் கே.வாசுகி. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். கடந்த ஆண்டு கேரளாவை புரட்டி போட்ட கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளின் போது, சிறப்பாக பணியாற்றினார்.
Samayam Tamil Vasugi IAS


கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி கேரளாவில் நடைபெற்ற ”வனிதா மதில்” என்ற பெண்கள் சுவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் யாரோ ஒருவர் பயன்படுத்திய சேலையை அணிந்து, அதை தனது பேஸ்புக்கில் ஆட்சியர் வாசுகி பதிவேற்றம் செய்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இரு மாதங்களுக்கு முன்பு வர்கலா பேருந்து நிலையத்தில் உள்ள ஆர்.ஆர்.எப்-ல் இருந்து யாரோ ஒருவர் பயன்படுத்தி தூக்கி போட்ட சேலை எனக்குக் கிடைத்தது.

அதை நான் அணிந்து வருவேன் என்று அப்போது கூறினேன். இதையடுத்து வர்கலா சிவகிரியில் கிரீன் புரோட்டக்கால் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு அந்த பழைய சேலையை அணிந்து சென்றேன்.

மறுபடியும் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தும் நோக்கில் அவ்வாறு செய்தேன். இதில் எனக்கு எந்தவொரு சங்கடமும் இல்லை. இந்த சேலை முழுவதும் காட்டன் அல்ல. ஒருவகையில் இதுவும் பிளாஸ்டிக் தான்.

இதை 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு உடுத்துவதன் மூலம், இயற்கையை பாதுகாக்க உதவ முடிவு செய்துள்ளேன் என்றார். ஆட்சியர் வாசுகியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி