ஆப்நகரம்

டிரம்ப் டவரை ஆரம்பிக்க நாளை இந்தியா வருகிறார் ஜூனியர் டிரம்ப்!!

அமெரிக்க அதிபரின் டிரம்ப்பின் நிறுவனம் சார்பாக இந்தியாவில் தொடங்கப்பட உள்ள டிரம்ப் டவர்ஸ் என்ற குடியிருப்பு திட்டத்தை தொடங்க ஜூனியர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார்

Samayam Tamil 18 Feb 2018, 6:59 pm
Samayam Tamil trump jr to launch trump towers project in india
டிரம்ப் டவரை ஆரம்பிக்க நாளை இந்தியா வருகிறார் ஜூனியர் டிரம்ப்!!
ஹரியானா: அமெரிக்க அதிபரின் டிரம்ப்பின் நிறுவனம் சார்பாக இந்தியாவில் தொடங்கப்பட உள்ள டிரம்ப் டவர்ஸ் என்ற குடியிருப்பு திட்டத்தை தொடங்க ஜூனியர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார்.

அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப், ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் நிறுவனமான டிரம்ப் ஆர்கனைஷேசன் பல ஆண்டுகளாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது.

இந்நிலையில், டிரம்ப் நிறுவனத்தின் சார்பாக மும்பை, கொல்கத்தா, புனே மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் டிரம்ப் டவர்ஸ் என்ற பெயரில் சொகுசு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

இதன் கட்டுமானப் பணிகளைக் காண டிரம்ப் ஆர்கனைசேஷனின் செயல் தலைவரும், டொனால்ட் டிரம்ப்பின் மகனுமான ஜூனியர் டிரம்ப் நாளை இந்தியா வருகிறார்.

முன்னதாக, டெல்லியில் பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறும், சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்க உள்ளார். பின்னர், மும்பை மற்றும் கொல்கத்தாவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் குடியிருப்புகளைப் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நீச்சல் குளம், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம், உணவகம், வர்த்தக மையம் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட டிரம்ப் டவரின் குடியிருப்பில் ஒரு பிளாட்டின் விலை 1.5 மில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி