ஆப்நகரம்

Namaste Trump: மனைவி,மகளுடன் இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர்

7 ஆவது முறை இந்தியா வரும் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், இன்று மொதேரா மைதானத்தில் நடக்கவிருக்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

Samayam Tamil 24 Feb 2020, 12:27 pm
இந்திய நேரப்படி சரியாக காலை 11.58 மணியளவில் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
Samayam Tamil kem chho trump


7 ஆவது முறை இந்தியா வரும் அமெரிக்க அதிபரான டொனால்ட் ட்ரம்ப், இன்று மொதேரா மைதானத்தில் நடக்கவிருக்கும் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார்.

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இந்தியா வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத் விமான நிலையத்தில் பிரத்யேக விமானத்தில் இருந்து இறங்கி தனது பிரத்யேக ‘பீஸ்ட்’ காரில் மைதானம் நோக்கிச் செல்வார்

ட்ரம்ப் இந்தியா வறதால என்ன நன்மை? முதல்ல இந்த 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க!

மைதானத்துக்கு செல்லும் வழியில் குஜராத்திய நடனங்களும் நடைபெற உள்ளன. 28 இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இந்தியா வந்திறங்கிய ட்ரம்ப்பை பிரதமர் மோடீ வரவேற்கும் நிகழ்ச்சியாக நம்ஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நரேந்திர மோடி அமெரிக்கா சென்றபோது ஹௌடி மோடி என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குஜராத் வரும் ட்ரம்ப்புக்கு ஸ்நாக்ஸ் ரெடி... சமோசா,காஜு கட்லி இன்னும் என்னென்ன தெரியுமா?

இதற்கு கைம்மாறு செய்யும் விதத்தில்தான் இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


விமான நிலையத்தில் இருந்து காந்தி ஆசிரமம் செல்வது அடுத்தகட்டத் திட்டமாக உள்ளது.

பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகிறேன் என்று தெரிவித்துவிட்டுத்தான் ட்ரம்ப் இந்தியா வந்திருக்கிறார். ஏறக்குறய ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி