ஆப்நகரம்

சபரிமலை கோயிலில் டிவி கேமராமேன் மீது தாக்குதல்!

பெண்கள் வருகைக்கு எதிராக சபரிமலைக் கோயிலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது மலையாள டிவி கேமராமேன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

Samayam Tamil 7 Nov 2018, 6:14 am
பெண்கள் வருகைக்கு எதிராக சபரிமலைக் கோயிலில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது மலையாள டிவி கேமராமேன் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
Samayam Tamil sabari mala 144


சபரிமலைக்கோயிலில் பெண்கள் வரக்கூடாது என்று நேற்று ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது, 52 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கோயிலுக்குள் செல்ல முயன்றார். இதனைக்கண்ட பக்தர்களும், ஆர்ப்பாட்டக்காரர்களும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மலையாள செய்தித்தொலைக்காட்சி கேமராமேன் விஷ்னு என்பவர் ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். இந்த ஆர்ப்பாட்ட காட்சிகளானது தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. கேமராமேன் வீடியோ எடுப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரை நெருங்கி தாக்க முயற்சித்தனர்.

விபரீதத்தை உணர்ந்த விஷ்ணு, கேமராவை உடனிருந்த மற்ற செய்தியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்தார். ஆனால், அதற்குள்ளாக அவரை பிடித்து இழுத்த ஆர்ப்பாட்டக்கார்கள் அவர் மீது சராமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், அங்கிருந்த சேர்களை கொண்டும் விஷ்ணு மீது வீசி எறிந்து விரட்டினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், விஷ்ணுவை மீட்டுக் கொண்டு சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. முன்னதாக, கோயிலுக்குள் நுழைந்த பெண்மணியின் பெயர் லலிதா என்றும் அவர் 52 வயதைக் கடந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிவி கேமராமேன் தாக்கப்பட்ட சம்பவத்தால், சபரிமலைகோயிலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி