ஆப்நகரம்

டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்த மத்திய அரசு!

குடியுரிமையில் பாகுபாடு கூடாது எனப் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

Samayam Tamil 21 Dec 2019, 12:41 am
“சில டிவி சேனல்கள் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் விதிகளை மீறிச் செயல்பட்டு வருவதாகக் கண்காணிப்பில் தெரியவந்துள்ளது” என மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், டிவி சேனல்களுக்கு எச்சரிக்கை ஒன்றையும் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் விடுத்துள்ளது.
Samayam Tamil Screenshot_1


குடியுரிமையில் பாகுபாடு கூடாது எனக் கூறி மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தைப் போல நாடு முழுவதும் விரிவடைந்து வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் லட்சக் கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், காவல் துறையினர் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகிறனர்.

“கல்லூரி விடுமுறையால், அனைத்து தெருக்களும் போராட்டக் களமாகும்”

இதற்கிடையே தமிழ்நாட்டிலும் மாணவர்கள் மத்தியில் போராட்டம் தீயைப் போலப் பரவி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் தமிழ்நாடு அரசு ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது.

இந்த வேளையில் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இப்போதுள்ள சூழலில் சில டிவி சேனல்கள் தகவல், ஒளிபரப்பு அமைச்சகத்தின் விதிகளை மீறியுள்ளது கண்காணிக்கப்பட்டுள்ளது. இது நாங்கள் அறிவுறுத்தியுள்ள வழிமுறைகளுக்குப் புறம்பானது. இப்போது மீண்டும் டிவி சேனல்களுக்கு அதை நினைவூட்டுகிறோம்.

உ.பியில் 6 போராட்டக்காரர்கள் பலி, யோகி ஆதித்யநாத் எம்எல்ஏவுக்கு ஆயுள் என முக்கியச் செய்திகள் 2 நிமிட வாசிப்பில்...

அதன்படி, சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை ஒளிபரப்பக் கூடாது. குறிப்பாக நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கிற்குப் பிரச்சினை வரும் வகையில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது. நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் கருத்துகளும் வெளியிடக் கூடாது.

அதேபோல், நாட்டில் தேவையற்ற வகையில் எந்தவொரு தனிநபர் மீதோ கூட்டத்தின் மீதோ தேவையற்ற குற்றச்சாட்டுக்களையோ முன் வைக்கக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி