ஆப்நகரம்

சிக்கிய திருடர்கள்; சிக்கிக் கொண்ட போலீசார் - கொரோனா செஞ்ச வேலையை பாருங்க!

திருடர்கள் மூலம் போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Samayam Tamil 21 May 2020, 9:23 am
கர்நாடக மாநிலத்தில் இன்று காலை நிலவரப்படி 1,462 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 864 பேர் தொடர் சிகிச்சையில் இருக்கின்றனர். 1,013 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 38 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக பெங்களூருவில் 250 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 124 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் பலியாகி இருக்கின்றனர். எஞ்சியவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கடுத்த இடங்களில் மாண்டியா, கலபுர்கி, பெலகாவி, தாவனகரே, மைசூரு ஆகிய மாவட்டங்கள் இருக்கின்றன.
Samayam Tamil பெங்களூரு கைதிகள்


இந்நிலையில் பெங்களூருவில் கட்டுமான வேலைகள் நடைபெறும் இடத்தில் இருந்து இரும்பு பொருட்களை இருவர் திருடிச் சென்றுள்ளதாக புகார் வந்துள்ளது. இதையடுத்து அவர்களை ஹெப்பகோடி போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மீண்டும் ஒரு புதிய உச்சம்; விடாமல் துரத்தும் கோவிட்-19 - எஸ்கேப் ஆகுமா இந்தியா?

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டனர். இந்த சூழலில் சிறையில் அடைப்பதற்கு முன்பாக குற்றவாளிகள் இருவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் இரண்டு பேருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் ஹெப்பகோடி காவல் நிலைய போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த காவல் நிலையத்தில் இருந்த 24 போலீசாரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்கள் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இரண்டு கைதிகளால் ஒட்டுமொத்த காவல் நிலையமும் கொரோனா அச்சத்தில் சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

அடுத்த செய்தி