ஆப்நகரம்

கோமாவிலிருப்பவர் யாருடைய கணவர்? போட்டிபோடும் பெண்கள்

கோமாவில் இருக்கும் நபர் தன்னுடைய கணவன் தான் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரியுள்ள வழக்கிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்வை அளித்துள்ளது.

TNN 23 Jun 2016, 4:38 pm
டெல்லி: கோமாவில் இருக்கும் நபர் தன்னுடைய கணவன் தான் என்று இரண்டு பெண்கள் உரிமை கோரியுள்ள வழக்கிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தீர்வை அளித்துள்ளது.
Samayam Tamil two delhi women are fighting a legal battle to lay claim on husband in coma
கோமாவிலிருப்பவர் யாருடைய கணவர்? போட்டிபோடும் பெண்கள்


மருத்துவமனையில் கோமாவில் இருந்த தன் கணவனை வடக்கு டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் அவரது மகனும் சேர்ந்து கடத்திச்சென்றுவிட்டதாக மற்றொரு பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட பெண், கோமாவில் இருப்பவர் தன் கணவன் தான் என்று பதிலளித்துள்ளார்.

இந்த விகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்டானி மற்றும் சங்கீத திங்ரா செஹல் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர்களுக்கு தற்காலிகமான தீர்வை அளித்துள்ளனர். அதன்படி வழக்கு தொடர்ந்த பெண் கோமாவில் இருக்கும் நபரை வாரம் தோறும் புதன்கிழமைகளில் ஒருமணி நேரம் மட்டும் பார்வையிடலாம் என்றும் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் பராமரிப்பிலேயே அந்த நபர் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்த வழக்கின் மீதான தொடர் விசாரணை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி