ஆப்நகரம்

வழக்கறிஞர்கள் தற்கொலை முயற்சி... டெல்லி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு!!

டெல்லி போலீஸாரை கண்டித்து, நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, வழக்கறிஞர்கள் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 6 Nov 2019, 5:16 pm
டெல்வி தீல் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துவது தொடர்பாக, வழக்கறிஞர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்க, விஷயம் டெல்லி உயர் நீதிமன்றம் வரை போனது.
Samayam Tamil L1


இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், டெல்லி காவல் துறை அதிகாரிகள் இருவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதனை கண்டித்து, டெல்லி காவல் துறை தலைமையகத்தில் போலீஸார் செவ்வாய்க்கிழமை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உயரதிகாரிகள உறுதியளித்ததையடுத்து, இரவு 8 மணியளவில் போலீஸார் போராட்டத்தை வாபஸ் பெற்:றனர்.

இந்த நிலையில், தங்கள் மீது துப்பாக்கிச் சூடும், தடியடியும் நடத்திய போலீஸார் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கத்தினரும், தொடர்ந்து மூன்றாவது நாளாக புதன்கிழமை (இன்று) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடகிழக்கு டெல்லி பகுதியில் அமைந்துள்ள ரோகிணி நீதிமன்ற வளாகத்திலும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். அப்போது திடீரென வழக்கறிஞர் ஒருவர், கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை உடம்பில் ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை சக வழக்கறிஞர்கள் தக்க சமயத்தில் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

நாள் முழுக்க நீடித்த போராட்டம்... வாபஸ் பெற்ற டெல்லி போலீஸார்!!

இதேபோன்று மற்றொரு வழக்கறிஞர், நீதிமன்ற வளாக கட்டடத்தின் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார். போலீஸ் உயரதிகாரிகள் பேசி, அவரை சமாதானப்படுத்தினர். வழக்கறிஞர்கள் இருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம், நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அத்துடன், வழக்கு விசாரணைக்காக வந்தவர்களை வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதிக்காததால் அங்கு மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி