ஆப்நகரம்

உபர் பயணத்தில் நேர்ந்த பாலியல் அனுபவத்தை பகிர்ந்த இளம் பெண்

தில்லியில், உபர் கார் ஓட்டுநர் காரில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 17 Mar 2017, 10:45 am
புதுதில்லி: தில்லியில், உபர் கார் ஓட்டுநர் காரில் பயணித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil uber cabbie harasses woman throws her out
உபர் பயணத்தில் நேர்ந்த பாலியல் அனுபவத்தை பகிர்ந்த இளம் பெண்


உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் உபர் கார் நிறுவனம், நன்னடத்தை குறித்த நெறிமுறைகளை வெளியிட்டிருக்கும் நிலையில், தில்லியில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உபர் ஓட்டுநர், அப்பெண்ணை குறிப்பிட்ட இடத்தில் சென்றுவிடாமல் பாதி வழியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான பதிவு தற்போது வைரலாகி வருகிறது. கடந்த புதன்கிழமை காரி பயணம் செய்த பெண்ணிடம் பேச்சு கொடுத்த ஓட்டுநர், பின்னர் பாலியல் தொல்லை கொடுத்து, நெருங்கி வந்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தவுடன் அப்பெண்ணை காரில் இருந்து பாதி வழியிலேயே இறக்கிவிட்டது மட்டுமல்லாமல், அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அதுபோன்ற சூழலில் புத்திசாலித்தனமாக சிந்தித்த அப்பெண் அந்த ஓட்டுனரிடம் தப்பி வந்ததாக சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். அப்பெண் மெஹ்ருளியில் இருந்து குர்காவனுக்கு பயணித்துள்ளார்.

இதையடுத்து, குற்றம்சாட்டப்படும் ஓட்டுனரை நீக்கிவிட்டதாகவும், இது தொடர்பாக காவல்துறையின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டிருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உபர் ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது குறிப்பிறத்தக்கது.

A week after Uber came out with a set of guidelines for "ideal" behaviour of riders in its cabs countrywide, an Uber cabbie allegedly harassed a woman passenger and asked her to get out of the vehicle midway to her destination.

அடுத்த செய்தி