ஆப்நகரம்

நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை - எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கம்

பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

Samayam Tamil 7 May 2021, 7:28 pm

ஹைலைட்ஸ்:

  • நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை
  • டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திடீர் விளக்கம்


ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil chhota rajan
சோட்டா ராஜன்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும், பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை என, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில், பிரபல நிழலுலக தாதா சோட்டா ராஜன் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது, 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த மாதம் சோட்டா ராஜனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அறிகுறியற்ற கொரோனா தொற்றுக்கு ஆளான சிறைக் காவலரிடமிருந்து, அவருக்கு வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கொரோனா 3-வது அலை? மத்திய அரசின் மூத்த அதிகாரி விளக்கம்
இதை அடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைக்காக, சோட்டா ராஜன் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சோட்டா ராஜன் இன்று உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள், சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை என்றும், கொரேனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், உயிரிழப்பு தொடர்பான செய்தி வதந்தி என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி