ஆப்நகரம்

பட்ஜெட் 2022: அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அரசு அழைப்பு

ஜனவரி 31ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு.

Samayam Tamil 21 Jan 2022, 9:02 pm
2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அரசு தயாராகி வருகிறது. பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
Samayam Tamil Parliament


ஜனவரி 31ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதே நாளில் காலை 11 மணிக்கு குடியரசு குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பாக பொருளாதார அறிக்கை வெளியிடப்படும்.

அடுத்த நாளான பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். ஜனவரி 31ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

யூடியூப் சேனல்களுக்கு தடை.. இந்திய அரசு உத்தரவு!
இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் முன்வைக்க திட்டமிட்டுள்ள விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதேபோல அரசு தரப்பிலும் பட்ஜெட் கூட்டத்தொடர் அஜெண்டா குறித்து தகவல் வழங்கப்படும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு முன் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டமும், அதன் பின் தேசிய ஜனநாயக் கூட்டணி தலைவர்களின் கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரை முதற்கட்டமாகவும், மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். மார்ச் 18ஆம் தேதி ஹோலி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அடுத்த செய்தி