ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 13 Mar 2020, 12:57 pm
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


பணவீக்கத்தால் செலவுகள் அதிகரிக்கும் போது அதனைக் கட்டுப்படுத்த அகவிலைப்படியை உயர்த்தி அளிக்கப்படுவதே அகவிலைப்படியாகும். அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இதுவரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வில் இதுதான் அதிகம். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அப்போது தெரிவித்திருந்தார்.

கொரோனா பாதித்த கர்நாடகா முதியவர் பலி: இந்தியாவில் முதல் உயிரிழப்பு

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என 1 கோடிக்கும் அதிகமானோர் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி