ஆப்நகரம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Samayam Tamil 21 Oct 2020, 4:20 pm
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொளி காட்சி வாயிலாக இன்று நடைபெற்றது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


மத்திய அமைச்சரவை கூட்டத்துக்கு பின்னர் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேருக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விஜய தசமிக்கு முன் ஒரே தவணையாக போனஸ் வழங்கப்படும் என்றார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதன் மூலம் அரசுக்கு ரூ.3,737 கோடி செலவு ஏற்படும். இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள 30.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவர் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி: அடடே அறிவிப்பு!

இந்த தொகையானது மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். போனஸ் வழங்குவதன் மூலம் பண்டிகை காலத்தில் பணப்புழக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அப்போது தெரிவித்தார்.

அடுத்த செய்தி