ஆப்நகரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைவு: ஹேப்பி நியூஸ்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 1 Dec 2020, 11:41 pm

உலகளவில் கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. இந்நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil India Covid-19


இதுகுறித்து மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, “நவம்பர் 11 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு விகிதம் 7.15 விழுக்காட்டில் இருந்து 6.69 விழுக்காடாக குறைந்துள்ளது.

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் பாதிக்கப்பட்ட நபர்களை காட்டிலும் குணமடைந்த கோவிட்19 நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 31,118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்தியாவில் இருக்கும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 4,35,603.

கொரோனாவை தடுக்க உதவும் டார்க் சாக்லேட்!

கடந்த 24 மணி நேரத்தில் 41,985 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 88,89,585. கோவிட்-19 நோயில் இருந்து குணமடைவோர் விகிதம் 93.94 விழுக்காடாக இருக்கிறது.

குணமடைந்த நபர்களில் 76.82 விழுக்காட்டினர் 10 மாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அதிகபட்சமாக கேரளத்தில் ஒரே நாளில் 6,055 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்தபடியாக டெல்லியில் 5,824 பேர் குணமடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி