ஆப்நகரம்

மாடுதான் முக்கியம்... கலெக்டர் வேலையை கிழித்த முதல்வர்...

உத்திர பிரதேஷ் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சி அதிகாரத்துக்கு யோகி ஆதித்யநாத் வந்தபோதிருந்தே மாநிலத்தில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு முறையாக உணவு வழங்குவதில்லை என பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், இப்போது மாட்டுக்காக கலெக்டர் உள்பட 6 பேரை பணிநீக்கம் செய்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

Samayam Tamil 1 Nov 2019, 12:45 am
உத்திர பிரதேஷ் மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நிச்லால் தெஹ்ஸிலி எனும் பகுதியில் மாதவலியா என்ற கோசாலை ஒன்று உள்ளது. இங்கு சுமார் ஆயிரம் மாடுகள் வரை இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கோசாலையில், முறையாக மாடுகளைப் பராமரிக்கவில்லை எனக் கூறி மகாராஜ்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் அமர்நாத் உபாதியாயவை, மாநில அரசுப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil while_crime_rate_soars_up_cm_yogi_adityanath_clears_cow_cess_to_protect_stray_cattle_in_up_1546408535_725x725


“மோடி, அமித்ஷாவ கொல்வோம்..” காஷ்மீரில் ஒரு மிலிட்டரி இருக்கக் கூடாது..! பகிர் மிரட்டல்

பணி நீக்கம் செய்த விவகாரத்தை உத்திர பிரதேஷ் மாநிலத் தலைமைச் செயலர் ஆர்கே திவாரி உறுதிப்படுத்தியுள்ளார். மாவட்ட ஆட்சியர் மட்டுமின்றி, துணை மாவட்ட ஆட்சியர், முன்னாள் துணை மாவட்ட ஆட்சியர், தலைமை கால்நடை அதிகாரி என 6 பேரைப் பணி நீக்கம் செய்துள்ளது அந்த மாநில அரசு.

இரண்டு நிமிட வாசிப்பில், இன்றைய நிகழ்வுகள்...

இதுகுறித்து அரசு, ‘முறையாக மாடுகளைப் பராமரிக்கவில்லை, தீவனம், கால்நடை பராமரிப்பு என அரசின் நிதியை முறைகேடாகச் செலவழித்து வந்தது தெரியவந்துள்ளது. அதேபோல், கோசாலையில் 2 ஆயிரத்து 500 மாடுகள் இருந்ததாகப் பொய் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. அங்கு ஆய்வு நடத்தியபோது 954 மாடுகள் மட்டுமேயிருந்தது’ எனத் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி