ஆப்நகரம்

தமிழரை கோரக்பூர் ஆட்சியராக நியமித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்!

முதலமைச்சர் யோகி தமிழர் ஒருவரை ஆட்சியராக நியமித்துள்ளார்.

Samayam Tamil 18 Mar 2018, 12:32 pm
கோரக்பூர்: முதலமைச்சர் யோகி தமிழர் ஒருவரை ஆட்சியராக நியமித்துள்ளார்.
Samayam Tamil up cm yogi adityanath appoints tamil person as gorakhpur district collector
தமிழரை கோரக்பூர் ஆட்சியராக நியமித்த உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனி மெஜாரிட்டியுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்தும், துணை முதலமைச்சராக கேசவ் பிரசாத் மவுரியாவும் பதவி வகித்து வருகின்றனர்.

சமீபத்தில் கோரக்பூர், பூல்பூர் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் சமாஜ்வாதி கட்சியிடம் பாஜக தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் 36 ஐஏஎஸ், 43 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் தனது சொந்த மாவட்டமான கோரக்பூருக்கு தமிழரான விஜயேந்திர பாண்டியனை ஆட்சியராக யோகி நியமித்துள்ளார்.

விஜயேந்திர பாண்டியன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். முன்னதாக விஜயேந்திரரரிடம் பேசிய முதலமைச்சர், தனது மாவட்டப் பணிகளின் வளர்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தும்படி வேண்டியுள்ளார்.

இவரைப் போல் ஏராளமான தமிழர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளாக உ.பி.,யில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் முக்கிய பகுதிகளில் பணியமர்த்துவது வழக்கமாக உள்ளது.

UP CM yogi Adityanath appoints Tamil person as Gorakhpur district collector.

அடுத்த செய்தி