ஆப்நகரம்

UP Gangster Dubey: பிரபல கேங்ஸ்டர் விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

எட்டு போலீசாரை சுட்டுக் கொன்ற வழக்கில் கைதான விகாஸ் துபே கான்பூர் அழைத்து செல்லப்பட்ட வழியில் இன்று காலை என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட்டுள்ளார்.

Samayam Tamil 10 Jul 2020, 12:42 pm
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே பிக்ரு கிராமத்தில் தன்னைப் பிடிக்க வந்த 8 போலீசாரை சுட்டுக் கொன்று கேங்ஸ்டர் விகாஸ் துபே தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்க 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டு 2,000க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். உத்தரப் பிரதேசத்திற்கு அருகிலுள்ள பிற மாநில போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சூழலில் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் கோவிலில் வழிபடச் சென்ற போது போலீசாரால் துபே கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil Vikas Dubey


அவரை மத்தியப் பிரதேசத்தில் இருந்து கான்பூருக்கு போலீசார் இன்று காலை அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக போலீசாரின் பாதுகாப்பு வாகனம் ஒன்று தடம்புரண்டது.

ரோஜாவின் திடீர் ஆம்புலன்ஸ் ரைடு..! சர்ச்சையில் சிக்கியுள்ள எம்எல்ஏ

இந்த வாய்ப்பை பயன்படுத்தி போலீசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பிச் செல்லும் முயற்சியில் விகாஸ் துபே ஈடுபட்டுள்ளார். ஆனால் அவரை சரணடையுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

அப்போது போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார். உடனே போலீசார் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் விகாஸ் துபே படுகாயம் அடைந்தனர். உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு துபேவை கொண்டு சென்றனர்.

ஆனால் ஏற்கனவே விகாஸ் துபே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனை கான்பூர் மேற்கு காவல்துறை எஸ்.பி செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

எந்த விசாரணைக்கும் தயார்: பினராயி விஜயன்

கடந்த 6 நாட்களாக போலீசாருக்கு பெரும் தலைவலியாக இருந்த கேங்ஸ்டர் விகாஸ் துபே இன்று காலை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பரபரப்புக்கு ஆளாக்கியுள்ளது.

அடுத்த செய்தி