ஆப்நகரம்

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லையாம்... உ.பி. போலீஸ் புது தகவல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி உத்தரப் பிரதேச போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 1 Oct 2020, 6:43 pm
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 20 வயதான பட்டியலினப் பெண் ஒருவர் ஆதிக்க சாதியை சேர்ந்த 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil up


அப்பெண்ணின் நாக்கு வெட்டப்பட்டு, கழுத்து எலும்பு, முதுகெலும்பு ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில், டெல்லியில் உள்ள சாஃப்தர்ஜங் மருத்துவமனையில் இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அப்பெண், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, இறுதிச் சடங்கிற்காக அப்பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எடுத்துச் சென்று அவசர அவசரமாக நள்ளிரவில் தகனம் செய்துள்ளனர் போலீசாரின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நிலையில், இறந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில போலீஸார் ஒரே போடாக போட்டுள்ளனர்.

PM Modi: குற்றவாளிகளை விட்றாதீங்க; பிரதமர் போட்ட ஃபோன் கால் - களமிறங்கிய முதல்வர்!

இளம்பெண் இறந்த சம்பவம் தொடர்பான தடயவியல் அறிக்கையை சுட்டிக்காட்டி, உத்தரப் பிரதேச மாநில காவல் துறை உயரதிகாரி பிரசாந்த் குமார் இன்று கூறும்போத, " கழுத்து எலும்பு முறிவு காரணமாக இளம்பெண் இறந்ததாக அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இந்தச் சம்பவம் தொடர்பான தடயவியல் அறிக்கையில், இளம்பெண்ணின் உள்ளுறுப்பில் விந்தணுக்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இறந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. ஆனால், இந்தச் சம்பவத்தை சிலர் ஜாதி பிரச்சினையாக மாற்ற முயன்று வருகின்றனர். அத்தகையவர்கள் கண்டறியப்பட்டு சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியை கீழே தள்ளிவிட்டு கைது செய்த போலீசார்: உ.பி.யில் பரபரப்பு

சம்பவம் நிகழ்ந்து சில தினங்களுக்கு பிறகே தடயவியல் பரிசோதனைக்கான மாதிரிகள் இளம்பெண்ணின் உள்ளுறுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. எனவே, அப்போது விந்தணுக்கள் இருக்காமல் போக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில போலீசார் கூறியுள்ளது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி