ஆப்நகரம்

உத்தரபிரதேச கனமழையில் சிக்கி 18 பேர் பலி: மீண்டும் புயல் தாக்க வாய்ப்பு!

உத்தர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் புயல் மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.

Samayam Tamil 11 May 2018, 8:53 am
உத்தர பிரதேசம் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் புயல் மழையில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil up
உத்தரபிரதேச கனமழையில் சிக்கி 18 பேர் பலி: மீண்டும் புயல் தாக்க வாய்ப்பு!


உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை சமீபத்தில் தாக்கிய புழுதி புயலில் சிக்கி, 124 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். புயலின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

இந்த நிலையில் மீண்டும் உத்தரபிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையில் சிக்கி இதுவரை 18 உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், உத்தரபிரதேசத்தின், இடாவா நகரில் 5 பேர், மதுரா, அலிகார், ஆக்ராவில் தலா 3 பேர், பிரோசாபாத்தில் 2 பேர், ஹத்ராஸ் மற்றும் கான்பூரில் தலா ஒருவர் என மொத்தம் 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்தனர்.

இதற்கிடையே மதுராவில் புயல் மழையில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்த துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, புயலில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு, தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்துவரும் நிலையில், மீண்டும் புயல் தாக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி