ஆப்நகரம்

காங்., எம்.பி.-க்கள் மக்களவையில் அமளி

உத்தரகாண்ட் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TNN 25 Apr 2016, 11:47 am
புதுதில்லி: உத்தரகாண்ட் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil uproar in lokhsaba cong mps rises uttarkand issue
காங்., எம்.பி.-க்கள் மக்களவையில் அமளி


இன்று தொடங்கிய நாடாளுமன்ற இரண்டாவது கூட்டத்தொடர் வருகிற மே 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 15 அமர்வுகள் கொண்ட இந்த தொடரில் நிதி மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா என்பன உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், உத்தரகாண்ட் விவகாரம், வறட்சி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

அதேபோல், இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உத்தரகாண்ட் விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், மக்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி