ஆப்நகரம்

குழம்பிய குஜராத்; சமாதானப்படுத்திய அமித் ஷா; பொறுப்பேற்றார் துணை முதல்வர் நிதின் படேல்!

குஜராத்தில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

TNN 31 Dec 2017, 4:16 pm
அகமதாபாத்: குஜராத்தில் நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
Samayam Tamil upset nitin patel takes charge after assurance from amit shah
குழம்பிய குஜராத்; சமாதானப்படுத்திய அமித் ஷா; பொறுப்பேற்றார் துணை முதல்வர் நிதின் படேல்!


கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. இதையடுத்து முதலமைச்சராக விஜய் ரூபானியும், துணை முதலமைச்சராக நிதின் படேலும் தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் நிதி உள்ளிட்ட முக்கிய துறைகள் தனக்கு வழங்கப்படாததால், நிதின் படேல் அதிருப்தியடைந்தார்.

இதனால் தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் தனக்கான பொறுப்புகளை நிதின் படேல் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்து பேசிய அவர், தனக்கு புதிய துறை ஒதுக்கீடு செய்யப்படுவதற்கான கடிதம் விரைவில் ஆளுநரிடம் வழங்கப்படும் என்று கூறினார்.

'Upset' Nitin Patel Takes Charge After "Assurance" From Amit Shah.

அடுத்த செய்தி