ஆப்நகரம்

விவசாயிகள் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு.. என்ன செய்யப்போகிறார் மோடி?

விவசாயிகள் போராட்டத்துக்கு அமைதிவழியில் தீர்வு காணும்படி இந்தியாவிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2021, 10:50 pm

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் விவகாரம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பாடகியான ரிஹானா விவசாயிகள் போராட்டம் குறித்து ஆதரவு ட்வீட் பதிவிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மியா காலிபா உள்ளிட்ட சில பிரபலங்களும் ட்வீட் பதிவு செய்தனர்.
Samayam Tamil farmers protest


இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், பல்வேறு தரப்பினர் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி நரேந்திர மோடி அரசிடம் அமெரிக்க அரசு வலியுறுத்தியுள்ளது.

பெல்ட் விற்பணை முதல் பாப் ஸ்டார் வரை: யாரும் அறியாத ரிஹானா!

மேலும், அமைதிவழி போராட்டங்கள்தான் ஜனநாயக வளர்ச்சியின் தனிக்குறியீடு எனவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடங்களில் ஆர்பாட்டங்களை ஒடுக்குவதற்காக இண்டர்நெட் சேவைகள் முடக்கப்படுவது குறித்து அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசு துறையின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இண்டர்நெட் போன்ற சேவைகள் தடையில்லாமல் கிடைப்பது கருத்துரிமைக்கும், ஜனநாயகத்துக்கும் அடித்தளம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இதை இந்திய உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி