ஆப்நகரம்

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு.!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், இன்று மாலை வெளியாகும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

TNN 1 Dec 2017, 10:00 am
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், இன்று மாலை வெளியாகும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளன​ர்.
Samayam Tamil uthrapradesh civil body election result today
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு.!


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அதற்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி, கடந்த 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 52.59 சதவீதம் வாக்குகளும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 49.3 சதவீதம் வாக்குகளும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 53 சதவீதம் வாக்குகளும் பதிவானது.

இந்நிலையில், உ.பி.யில் மூன்று கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்குகிறது. இன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிடும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி