ஆப்நகரம்

புதுவகை வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்த வேளாண் விஞ்ஞானி!

வேளான் விஞ்ஞானி ஒருவர் உயர்தரமான புதுவகை வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 31 Oct 2018, 11:30 am
Read in English: Uttar Pradesh wonder onion grows faster, can be stored longer
Samayam Tamil photo (1)
புதுவகை வெங்காயத்தை பயிரிட்டு சாதனை படைத்த வேளாண் விஞ்ஞானி!


உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வேளான் விஞ்ஞானி ஒருவர் அதிக நாள் நீடித்திருக்க கூடிய உயர்தரமான வெங்காயத்தை பயிரிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பண்டா வேளாண் பல்கலைக்கழகத்தில் இணை பேராசியராக பணிபுரிபவர் ஆர்.கே. சிங். இவர் குறுகிய காலத்தில் அதிக விளைச்சலை தரக்கூடிய புதுவகையான வெங்காயத்தை பயிரிட்டு அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் ஆர்.கே. சிங் கூறுகையில், மற்ற வெங்காயங்களை அறுவடை செய்ய குறைந்தது 110 நாட்களாகும். ஆனால் இதை 80-லிருந்து 83 நாட்கள் என்ற குறுகிய காலத்தில் அறுவடை செய்யலாம். அதேபோல் மற்ற வெங்காயங்களுடன் ஒப்பிடுகையில், இந்த புதுவகை வெங்காயம் ஹெக்டேருக்கு 20% வரை அதிகமான விளைச்சலை தரும்.

மற்ற வெங்காயம், ஒரு மாதத்திலேயே முளைவிட ஆரம்பித்து விடும். ஆனால் இவற்றை பதப்படுத்தாமலே இரண்டரை மாதங்கள் வரை வைத்திருக்க முடியும். அதுவே குளிர்சாதன பெட்டியில் அதிகபட்சமாக 80 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும் என்று கூறினார்.

பேராசிரியர் ஆர்.கே. சிங், நாசிக் வேளாண் ஆராய்ச்சி பல்கலைக்கழைகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த புதுவகையான வெங்காயம் குறித்த சோதனையில் ஈடுபட்டுள்ளார். ஆராய்ச்சியின் தொடக்கத்தில் இந்த வெங்காயத்திற்கு Line-883 என்று பெயரிட்டுள்ளார். பிறகு பண்டா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றமான அவர் மீண்டும் தனது ஆராய்ச்சியை தொடர்ந்துள்ளார். அங்குள்ள காலநிலைக்கு இரண்டே ஆண்டுகளில் நல்ல முடிவுகள் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளும் இந்த வெங்காயத்தை பயிரிடத் தொடங்கி நல்ல விளைச்சலை சந்தித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ராம் சிங்( 49) கூறுகையில், உண்மையில் இந்த புதுவகை வெங்காயம் எங்களுக்கு கிடைத்த வரம். இந்த வெங்காயம் பூச்சி தாக்குதலை சமாளித்து மிகவும் நன்றாக வளர்கிறது. உள்ளூர் காலநிலைக்கேற்ப நல்ல விளைச்சலையும் தருகிறது என்று கூறினார்.

அடுத்த செய்தி