ஆப்நகரம்

சிறார்களுக்கு தடுப்பூசி: இன்று முதல் தொடக்கம்!

12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

Samayam Tamil 16 Mar 2022, 9:13 am
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி அடுத்த சில மாதங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதனிடையே, ஒமைக்ரான் பரவல் மூன்றாம் அலைக்கு வித்திட வாய்ப்புள்ளது என்பதால், சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, “15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும்” என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
'கவலைப்படாதீங்க.. நாங்க இருக்கோம்!' - மாணவர்களுக்கு முதல்வர் ஆறுதல்!
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மருத்துவக் குழுக்கள் நேரடியாக சென்று தடுப்பூசியை செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், மார்ச் 16ஆம் தேதி (இன்று) முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்தது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோர்பிவேக்ஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் இன்று தொடங்குகிறது. 60 வயதை கடந்த அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும் பொது சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி