ஆப்நகரம்

இனி போற பாதை எது தெரியுமா? சொந்த ஊர் மக்களால் உத்வேகம் பெற்ற மோடி!

சொந்த ஊர் மக்களின் அன்பால், புது ரத்தம் பாய்ந்தது போல் நாட்டிற்கு உழைப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

TNN 8 Oct 2017, 3:55 pm
வத்நகர்: சொந்த ஊர் மக்களின் அன்பால், புது ரத்தம் பாய்ந்தது போல் நாட்டிற்கு உழைப்பேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil vadnagars people has given me new energy to serve the nation
இனி போற பாதை எது தெரியுமா? சொந்த ஊர் மக்களால் உத்வேகம் பெற்ற மோடி!


குஜராத் மாநிலத்தில் உள்ள வத்நகர் பிரதமர் மோடியின் பிறந்த ஊர். அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த மோடி, நகர்வலம் சென்றார். அவருடைய வருகைக்காக, ஏராளமான பொதுமக்கள் காத்திருந்தனர்.

நகர் முழுவதும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக மோடி தான் பிறந்த இடத்திற்கு சென்றுள்ளார். அவரைக் கண்டதும் மோடி, மோடி என்று கூறி, மலர் தூவி வரவேற்றனர்.

இதையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வத்நகர் மக்களின் அன்பால் மிகவும் நெகிழ்ந்ததாக கூறினார். இது தனக்கு புது ரத்தம் பாய்ச்சியதாக குறிப்பிட்டார்.

இதனால் தேசத்திற்கு மிகுந்த ஆற்றலுடன் உழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது, தனக்கு கிடைத்த வரவேற்பை அவர் நினைவுகூர்ந்தார்.

தனக்கு சிவபெருமானின் அருள் இருப்பதாகவும், அதனால் எத்தகைய அவதூறுகள் வந்தாலும் திறம்பட உழைப்பேன் என்றார். இவ்வாறு உயர்ந்த நிலைக்கு வந்ததற்கு காரணம், தான் பிறந்த இடத்தின் பெருமைகளே என்று மோடி கூறினார்.

Love of Vadnagar's people has given me new energy to serve the nation: Modi.

அடுத்த செய்தி