ஆப்நகரம்

''நம்பிக்கையாக இருந்தேன்''... கொரோனா தொற்றிலிருந்து குணமாகிய இந்தியர்..!

குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளார். அவர் பகிர்ந்த சில அனுபவங்கள்...

Samayam Tamil 1 Apr 2020, 6:53 pm
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லேசாக உயர்ந்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும், பொது இடங்களில் ஒன்றாக கூட வேண்டாம் என்பதையும் வலியுறுத்தி நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் க்ரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர் தனது 14 நாட்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil கொரோனா தொற்றிலிருந்து குணமாகிய இந்தியர்


குஜராத் மாநிலம் வதோதரா சிட்டியைச் சேர்ந்தவர் சிராக் பண்டிட் (49). இவர் தொழில் ரீதியாக கடந்த பிப்ரவரி 27ம் தேதி ஸ்பெயின் நாட்டுக்கு சென்றார். பின்னர் மார்ச் 7ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு மும்பைக்கு 8ம் தேதி வந்துள்ளார். அங்கு இரண்டு நாட்கள் தங்கிய அவர் மார்ச் 10ம் தேதி வதோதராவுக்கு வந்தடைந்தார். இந்நிலையில் காய்ச்சல், தலைவலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற அவரின் ரத்த, சளி மாதிரிகைளை ஆய்வு செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உலகம் முழுக்க மக்களின் உயிரை பறித்து வரும் கொரோனா, தனக்கும் வந்துவிட்டதே என பயந்து பதறிப்போன அவரை அங்குள்ள மருத்துவர்களின் ஊக்குவிப்பால் பதட்டமின்றி சிகிச்சை பெற்று வந்துள்ளார். தொடந்து 14 நாட்கள் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை குணமாகியுள்ளது. மருத்துவமனையிவ் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் போது பண்டிட்டின் உறவினர்கள்,தெரிந்தவர்கள் அனைவரும் மருத்துவர்களுக்கு கைகளைத்தட்டி நன்றியை தெரிவித்தனர்.

கொரோனாவை கையாளும் மருத்துவர்கள் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு

இதுகுறித்து பண்டிட் கூறுகையில்; நான் இந்தியாவில் இல்லாமல் வேறு நாட்டில் சிகிச்சை பெற்றிருந்தால் குணமாகி இருப்பேனா என்று தெரியவில்லை. இந்த 14 நாட்களில் எனக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து வந்தனர். குஜராத் முதல்வர் விஜய் ருப்பானி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

குஜராத் அரசு எனக்கு உறுதுணையாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் வதோதரா மாவட்ட ஆட்சியர் வீடியோ கால் மூலம் என்னை தொடர்பு கொண்டு பேசினார். அரசின் ஆதரவான பேச்சு, மருத்துவர்களின் ஊக்கம் மற்றும் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையால் குணமடைந்துள்ளேன் என்றார். வதோதரா மாவட்டத்தில் முதல் கொரோனா வைரஸ் நோயாளி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி