ஆப்நகரம்

விநாயகர் உடன் கைகோர்த்த மோடி, குமாரசாமி; அற்புதமாக வடிவமைத்த சிற்பக் கலைஞர்!

விநாயகர் சிலையுடன் பல்வேறு தலைவர்களும் இருப்பது போன்று சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 12 Sep 2018, 5:53 pm
மைசூரு: விநாயகர் சிலையுடன் பல்வேறு தலைவர்களும் இருப்பது போன்று சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil g2


விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. இவற்றுடன் பூஜைப் பொருட்களையும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த கும்பர்கெரி ரேவண்ணா என்ற சிற்பக் கலைஞர் விநாயகர் சிலையுடன் சில தலைவர்களின் சிலைகளையும் உருவாக்கியுள்ளார்.

அதில் வரும் 2019 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கே வெற்றி என்று குறிப்பிடும் வகையில் விநாயகர் உடன் மோடி நின்று கொண்டிருக்கிறார். இவர்களது கைகளில் 2019 சேர்க்கப்பட்ட இந்திய வரைபடமும், பாஜக சேர்க்கப்பட்ட தாமரையும் இருக்கின்றன.

மற்றொன்றில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் சிலைகளும் விநாயகருடன் இடம்பெற்றுள்ளன.



மற்றொரு இடத்தில் நிலச்சரிவுடன் விநாயகரும், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Vajpayee, Modi, Kumaraswamy are with Ganesha, idols done by Mysuru Kumbargeri Revanna.

அடுத்த செய்தி