ஆப்நகரம்

சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிச்சிடுங்க : முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை

உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக (ரிசர்வ்) அறிவித்திட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான தொல். திருமாவளவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 17 Nov 2019, 10:49 pm
உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார்.
Samayam Tamil tveps


அப்போது மனு ஒன்றையும் அவர், முதல்வரிடம் அளித்தார். முதல்வருடனான தமது சந்திப்பு குறித்து, பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

உள்ளாட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி முதல்வரிடம் மனு அளித்துள்ளேன். அத்துடன், சென்னை மாநகராட்சியை தனித் தொகுதியாக அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளேன்.

ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திருமாவளவன்

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையில் தன் பங்கை மத்திய அரசு குறைத்துவிட்டது. இந்தத் தொகையை தமிழக அரசு ஈடுசெய்து அளிக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரியுள்ளேன்.

இலங்கை அதிபர் தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு காரணமான கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளதன் மூலம், ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை. அத்துடன் அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என திருமாவளவன் கூறினார்.

அடுத்த செய்தி