ஆப்நகரம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கை இன்று விசாரிக்கும் தேசிய பசுமை தீர்பாயம்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா குமுமம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Samayam Tamil 5 Jul 2018, 9:32 am
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா குமுமம் தொடர்ந்த வழக்கு தேசிய பசுமை தீர்பாயத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Samayam Tamil ngt_3fce4afa-616c-11e7-b1de-0034c3d6ea80
ஸ்டெர்லைட் விவகாரம்: தேசிய பசுமை தீர்பாயம் இன்று விசாரணை


தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நடத்திய போராட்டம், தொடர்ந்து நடந்த துப்பாகிச்சூட்டு போன்ற சம்பவங்களுக்கு பிறகு, கடந்த மே 28ம் தேதி அந்த ஆலையை தமிழக அரசு நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது.

அதை தொடர்ந்து, தமிழக அரசு ஆலைக்கான மின் இணைப்பை துண்டித்து, பூட்டி சீல் வைத்தது. இதனை எதிர்த்து சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாக கூறி வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

ஸ்டெர்லைட் ஆலை இயங்காததால் பலருக்கும் வேலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் எந்த பாதிப்பும் இல்லை என்று வேதாந்தா மனுவில் தெரிவித்துள்ளது.

ஆலையை திடீரென மூடப்பட்டுள்ளத்தால் ஆலையில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு பல்வேறு மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் மீண்டும் ஆலையை இயக்க உத்திரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த அமர்வில் இன்று சுற்றுச்சூழல் நிபுணர்களும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி