ஆப்நகரம்

விவசாயி மகன் வெங்கய்யா இந்த விஷயத்தில் நம்பர் 1!

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

TNN 11 Aug 2017, 4:03 pm
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கய்யா நாயுடு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Samayam Tamil venkaiah naidu first vice president to be born after independence pm narendra modi in rajya sabha
விவசாயி மகன் வெங்கய்யா இந்த விஷயத்தில் நம்பர் 1!


ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து, இன்று வெங்கய்யா நாயுடுவின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 10 மணிக்குத் தொடங்கிய இவ்விழாவில் 13வது துணை ஜனாதிபதியாக வெங்கய்யா பதவியேற்றுள்ளார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ஆகியோருடன் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

இவ்விழா நிறைவுற்றதும் மாநிலங்களவைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயடு ஆவார். நீண்ட கால அரசியல் பயணத்திற்குப் பிறகு இப்பதவிக்கு வந்திருக்கும் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் இருக்கிறார். இதே நாடாளுமன்ற வளாகத்தில் பல ஆண்டுகளாக அவர் செலவிட்டார். வெங்கய்யா நாயுடு அவர்களின் தலைமையில் மாநிலங்களவை மிகவும் சிறப்பாக செயல்படும் என்று கூறினார்.

மேலும், “விவசாயத்தைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் வெங்கய்யா நாயுடு. ஒரு விவசாயிக்குத்தான் விவசாயத்தில் உள்ள சவால்கள் தெரியும்” என்றும் புதிய துணை ஜனாதிபதியை பிரதமர் புகழ்ந்து தள்ளினார்.

அடுத்த செய்தி