ஆப்நகரம்

பசுவின் வயிற்றில் 100 கிலோ குப்பைகள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்

பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட சுமார் 100 கிலோ குப்பைகளை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

TOI Contributor 3 Sep 2016, 2:46 pm
அகமதாபாத்: பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்ட சுமார் 100 கிலோ குப்பைகளை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil veterinary doctors find 100 kg of garbage in cows stomach
பசுவின் வயிற்றில் 100 கிலோ குப்பைகள்: அதிர்ச்சியில் மருத்துவர்கள்


குஜராத் மாநிலம் சபர்மதி பகுதியில் இருந்து நோய்வாய்ப்பட்ட பசுவை ஜிவ்தயா அறக்கட்டளைக்கு கொண்டு வந்துள்ளனர். அப் பசுவாழ் நடக்கக் கூட முடியாத நிலையில் தான் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள், பசுவை சோதித்து பார்த்த போது, அது கர்ப்பமாக இருந்துள்ளது.

தொடர்ந்து, பசுவிற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், ஆணிகள், வயர்கள் உள்ளிட்ட சுமார் 100 கிலோ அளவிற்கு குப்பைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதற்கு முன்னதாக சுமார் 25 கிலோ முதல் 40 கிலோ வரையிலனா குப்பைகளை பசுக்களின் வயிற்றில் இருந்து அகற்றியுள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை இருக்கும் போதும், பசுவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட 98 கிலோ அளவிலான குப்பைகள் பிளாஸ்டிக் குப்பைகளே என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி