ஆப்நகரம்

சைஃபீ மசூதிக்கு பிரதமர் மோடி ஏன் சென்றார் ? விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி

மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிரபல சைஃபீ மசுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Samayam Tamil 17 Sep 2018, 11:44 am
மத்தியப்பிரதேசத்தில் உள்ள பிரபலசைஃபீ மசுதிக்கு பிரதமர் நரேந்திரமோடி சென்றது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
Samayam Tamil momo


இரண்டு நாட்களுக்கு முன்புதாவூதி போரா சமுதாயத்தினரின் சார்பில் இந்தூரில் உள்ளசைஃபீ மசூதியில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.அப்போது பேசிய மோடி, அமைதி என்பதைமுதன்மையாக கொண்டு செயல்படும் தாவூதி போரா சமூகத்தினர், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக விளங்குவதாகதெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பினர் பிரதமர் நரேந்திர மோடி மசூதிக்கு சென்றதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகவிஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் செயலாளர்மிலிந் பரந்தே கூறுகையில் ‘பிரதமர் மோடி மனதில் என்னநினைத்துக்கொண்டிருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. எங்கள் கேள்வி ஒன்றுதான். ஏன் அவர்மசூதிக்கு சென்றார்? அனைவரும் அவரவர் மத நம்பிக்கையின்படியே செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்தியாவில் ஆட்சி செய்ய நினைத்தால் இந்துக்களின் நலனை முன்னிருத்த வேண்டும். என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி