ஆப்நகரம்

அரசு அதிகாரிகள் வீட்டில் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்.!

ஆந்திர மாநிலத்தில் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், தங்க நகை, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

TNN 26 Sep 2017, 12:20 pm
ஆந்திர மாநிலத்தில் 2 அரசு அதிகாரிகள் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள், தங்க நகை, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Samayam Tamil vigilance departments seize property worth rs 500 crore government officials in andhrapradesh
அரசு அதிகாரிகள் வீட்டில் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்.!

ஆந்திர மாநிலத்தில் நகர்ப்புற வளர்ச்சி கழக இயக்குனராக இருப்பவர் கோல வெங்கடரகு. இவரது நண்பர் வெங்கட சிவபிரசாத் விஜயவாடா மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த அவர்களிடம் குறுகிய காலத்தில், கோடிக்கணக்கில் சம்பாதித்து இருந்தது லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் 2 அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் தங்க நகை, வைர நகைகள் மற்றும் பல ஏக்கர் உடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட சோதனையில், அரசு அதிகாரிகள் கட்டிட காண்டிராக்டர்களுடன் கூட்டு சேர்ந்தது மட்டுமல்லாமல், முறைகேடாக அனுமதி கொடுத்து லஞ்சம் பெற்றதாக தெரிய வந்தது.

Vigilance departments seize property worth Rs 500 crore Government officials in andhrapradesh

அடுத்த செய்தி