ஆப்நகரம்

போராடி எய்ம்ஸ் மருத்துவமனை பெற்ற கிராம மக்கள்!

123 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையை ஹரியானா மாநிலத்துக்கு வரவைத்த கிராம் மக்களின் அமைதிப் போராட்டம் பலருக்கு வியப்பை தந்துள்ளது.

Samayam Tamil 2 Feb 2019, 5:31 pm
123 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏய்ம்ஸ் மருத்துவமனையை ஹரியானா மாநிலத்துக்கு வரவைத்த கிராம் மக்களின் அமைதிப் போராட்டம் பலருக்கு வியப்பை தந்துள்ளது.
Samayam Tamil haryana


2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் ஹரியானாவில் ஏய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என பாஜ., வாக்குறுதி அளித்திருந்தது. இது ஐந்து வருடங்களாக நிறைவேற்றப்படவில்லை. ஹரியானா மாநிலத்தில் முதல்வர் மனோகர் லால் தலைமையில் பாஜ., ஆட்சி நடக்கிறது.

அங்குள்ள மனேதி கிராமத்தில் 5000 பேர் வாழ்கின்றனர். குர்கானில் இருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது மனேதி. இங்கு அவசர சிகிச்சைக்கு நகரத்து மருத்துவமனைக்குச் செல்ல நெடுநேரம் ஆகிவிடுகிறது. இதனால் அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ள நிலை ஏற்படுகிறது.

குர்கான் எம்பி ராவ் இந்திரஜித் சிங்கிடம் கிராம மக்கள் இதுகுறித்து தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்காக 200 ஏக்கர் நிலத்திலை அரசு கையகப்படுத்த இருந்தது.

இவர்கள் கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான ஆக்டோபர் 2ம் நாள் அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

இதனால் இந்திரஜித், மோடிக்கு இதுகுறித்து கடிதம் எழுதினார்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனேதி கிராம வாசிகள் 93வது நாள் போராட்டத்தை எட்டி இருந்தனர். நிதி அமைச்சர் பியூஷ் கோயல் மனேதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் எம்பி இந்திரஜித் மனேதி வந்து கிராம மக்களை நேரில் பார்த்த பிறகே உண்ணாவிரதம் நிறைவடையும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

அடுத்த செய்தி